×

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி: அடையாறு ஐஎன்எஸ் செல்கிறார்!

அரசு விழாவில் பங்கேற்க சென்னை வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த அனல்பறக்கும் வேளையில் தான் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். மோடியின் வருகை அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் நிலையில், கூட்டணி தொடர்பாக மோடி ஆலோசனை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் அரசியல் குறித்து பேச வாய்ப்பில்லை
 

அரசு விழாவில் பங்கேற்க சென்னை வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த அனல்பறக்கும் வேளையில் தான் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். மோடியின் வருகை அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் நிலையில், கூட்டணி தொடர்பாக மோடி ஆலோசனை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் அரசியல் குறித்து பேச வாய்ப்பில்லை என பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை பாஜக பிரமுகர்கள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். மோடியை காண, சென்னை விமான நிலையம் வெளியே தொண்டர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளார். சென்னை வந்திருக்கும் மோடி தற்போது ஹெலிகாப்டரில் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு புறப்பட்டார். அவரை வரவேற்க கட்சிக் கொடிகளை ஏந்திய படி தொண்டர்கள் காத்துக் கிடக்கின்றனர்.