×

சோழீஸ்வரருக்கு தீபாரதனை காட்டி வழிபாடு நடத்திய பிரதமர் மோடி..!

 


கங்கைகொண்ட சோழபுரத்தில்  ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள் சிற்பங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு வருகிறார்.  


ஆடி திருவாதிரை நிகழ்சியில் பங்கேற்பதற்காக  தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி,  திருச்சி விமான நிலையத்தில் இருந்து  ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்தை சென்றடைந்தார். முன்னதாக அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும், தமிழக அரசு சாபில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

பொன்னேரியில் இருந்து  சாலைமார்க்கமாக காரில்  படியில் நின்றவாறு பொதுமக்களை  சந்தித்து கைகளை அசைத்தவாறு  கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தடைந்தார்., வழிநெடுகிலும் அதிமுக, பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து  கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலுக்குச் சென்ற அவர்,   கோயில் மண்டபங்கள், சிற்பங்கள்  மற்றும் தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார்.  சோழீஸ்வரர் கோயிலுக்கு  பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

பின்னர் கங்கைகொண்ட சோழீஸ்வரரை வழிபட்ட பிரதமர் மோடிக்கு முன்னதாக, கோயிலில் பிரதான வாயிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.  சோழீஸ்வரருக்கு தீபாராதனை காட்டி வழிபட்டார்.  தொடர்ந்து துர்க்கை அம்மன் ஆலையத்திலும், பிரம்மாண்ட நந்திகேஸுவரரையும், கொடிமரத்திலும் வழிபாடு செய்தார்.