×

இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

 

டி20- உலகக்கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்றது.

சாம்பியன் ஆன இந்திய அணிக்கு, பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவு: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த அசாதாரண வெற்றி, வீரர்களின் அபாரத் திறமை, உறுதிப்பாடு மற்றும் குழு முயற்சியை பிரதிபலிக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் அவர்கள் அசாத்தியமான மனவலிமையை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும், பெருமையாலும், மகிழ்ச்சியாலும் நிரப்பியுள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.