இல. கணேசனின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
Aug 15, 2025, 22:13 IST
நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசனின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தேச கட்டமைப்பிற்கும், சேவைக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த தீவிரமான தேசியவாதியாக அவர் திகழ்ந்தார் என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது, “நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசனின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தேச கட்டமைப்பிற்கும், சேவைக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த தீவிரமான தேசவாதியாக அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். தமிழ்நாடு முழுவதும் பாஜகவை விரிவுபடுத்த அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அவர் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.