தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!
Apr 2, 2026, 11:26 IST
பிரதமர் நரேந்திர மோடி வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில், சென்னைக்கு வரவுள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மீனம்பாக்கம், கிண்டி மற்றும் பிரதமர் பயணிக்கும் முக்கிய வழித்தடங்கள் “RED ZONE”-ஆக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு நாட்களில், அரசு ஏற்பாடுகளைத் தவிர, ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன்கள், ரிமோட் கட்டுப்பாட்டு மைக்ரோ லைட் விமானங்கள், பாரா கிளைடர்கள், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை மார்ச் 24ம் தேதி முதல், மே 22ம் தேதி வரை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் பறக்க விடுவதற்கான தடை ஏற்கனவே அமலில் உள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.