×

கிணற்றில் விழச் சென்ற தந்தையை தடுக்கும் முயற்சியில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த பிளஸ் 2 மாணவி

 

அவிநாசி அருகே கிணற்றில் விழச் சென்ற தந்தையை தடுக்கும் முயற்சியில் கிணற்றில் விழுந்து பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்.


அவிநாசி அருகே சேயூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45). இவரது இளைய மகள் ரித்திகா (17). 12 ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்றிரவு மது அருந்திவிட்டு  வீட்டு வந்துள்ளார். இதனால் அவரது மனைவி கண்டிக்கவே, தகராறு ஏற்பட்டு அருகிலுள்ள 100 அடி ஆழக கிணற்றில் குதிக்க சென்றுள்ளார். அப்போது இளைய மகள் ரித்திகா (17) தந்தையை தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக இருட்டில் கால் இடறி உள்ளே விழுந்து பரிதாபமாக ரித்திகா உயிரிழந்தார்.  உயிரிழந்த மாணவி ரித்திகாவின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.மனைவி உடனான தகராறில் கிணற்றில் குதிக்க சென்ற தந்தையை தடுக்க வந்த பிளஸ் 2 மாணவி கால் இடறி வறண்ட கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.