×

சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்க வந்த இன்பநிதி..!

 

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச உள்ள நிலையில், அவரது மகன் இன்பநிதி தனது தந்தையின் சட்டமன்ற உரையை நேரில் பார்ப்பதற்காக, தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். 

இந்த நிலையில், இன்று பொதுமக்களுடன் இணைந்து வந்த இன்பநிதி, அவர்களுடன் அமர்ந்து பேரவை நிகழ்வுகளை கண்டுகளித்தார். முதலமைச்சர் விஜய் இன்று உயர்நீதிமன்ற தமிழ் வழக்காடு மொழி குறித்த தீர்மானம் கொண்டு வந்த நிலையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகளை இன்பநிதி பார்வையிட்டார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்க வந்த இன்பநிதி#CMVijay | #TNAssembly | #DMK | #Assembly | #PuthiyathalaimuraiTv pic.twitter.com/KyvnJKcOCX

— PttvOnlinenews (@PttvNewsX) September 3, 2026