×

தயவு செய்து ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள்! வெளிநாடு செல்ல வேண்டாம் - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!

 

தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

தங்கம் வாங்குவதைத் தவிர்க்கக் கோரிக்கைபொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் அடுத்த ஓராண்டு காலத்திற்குப் புதிதாகத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள நாட்டின் அந்நிய செலாவணி (Foreign Exchange) வெளிநாடுகளுக்குச் சென்று பொருளாதாரப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தங்கக் கட்டுப்பாட்டைத் தாண்டி, ஆடம்பரமான வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளை அடுத்த ஓராண்டுக்குத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதிச் சுமையைக் குறைக்கும் வகையில், "கொரோனா காலகட்டத்தைப் போலப் பணியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டிலிருந்தே பணியாற்றும் (Work from Home)" முறையைப் பின்பற்றுமாறு ஐடி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி விடுத்துள்ள பொருளாதாரச் சிக்கன வழிகள்:

  • எரிபொருள் சிக்கனம்: பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைச் சமாளிக்கக் கார் பூலிங் (Car Pooling) மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்
  • உள்நாட்டுப் பொருட்கள்: வெளிநாட்டுப் பொருட்களைத் தவிர்த்து, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே (Vocal for Local) முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • இயற்கை விவசாயம்: இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்களின் தேவையைக் குறைக்க இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்.

மத்திய கிழக்கு நாட்டுப் போரினால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $126 டாலரைத் தாண்டியுள்ள அசாதாரண சூழலில், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பைப் பாதுகாக்கவே இந்த முக்கியக் கோரிக்கைகளைப் பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்