×

தயவு செய்து யுபிஐ கட்டணம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் - நயினார் நாகேந்திரன்..!!

 

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான ‘டிஜிட்டல் இந்தியா’ இன்று உலகையே வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2016-ல் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, சாமானிய மக்கள் UPI மூலம் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாகவே இருந்து வருகின்றன. வரும் காலங்களிலும் சாமானிய மக்களிடமோ அல்லது சிறு கடைக்காரர்களிடமோ ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கப்படாது என்பதே உண்மை.

எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது

உலகின் மிகப்பெரிய பணப்பரிவர்த்தனை அமைப்பான UPI-ன் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவே தற்போது நிதி ஆதாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இது வணிகர்களுக்கும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தமே தவிர, இது சாமானிய மக்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனம்.

வதந்திகளை நம்ப வேண்டாம்

வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகுதான், இது குறித்து நிபுணர் குழு உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு இறுதி முடிவெடுக்கும். எனவே, எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காகப் பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.