யானை தாக்கியதால் தோட்ட தொழிலாளி மரணம்..!
Updated: Sep 27, 2025, 13:04 IST
மருதமலை பகுதியில் செந்தில் எனும் நபர் தான் வேலை செய்யும் தோட்டத்திற்கு நேற்று மாலை சென்றபோது யானை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து சமத்துவ இடத்திற்கு விரைந்த வன அலுவலர்கள், செந்திலை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட யானையை அடையாளம் காண நடவடிக்கைகள் வனத்துறையினரால் எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட யானையை அடையாளம் காண நடவடிக்கைகள் வனத்துறையினரால் எடுக்கப்பட்டு வருகிறது.