×

ஆதார் கார்டில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டம்..!!

 

ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள், புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க, ஆதாரில் புகைப்படம், முகவரி போன்றவை இருக்காத வகையில், புதிய ஆதார் அட்டையை ஆதார் ஆணையம் கொண்டு வர உள்ளது. தற்போது ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, ஆதார் எண் போன்ற விவரங்கள் உள்ளன. எனவே இவற்றை நகல் எடுத்து கொடுத்தால் அதை பெறுபவர்களுக்கு தனிப்பட்ட விவரங்கள் தெரிகிறது. இது எளிதில் தவறாக பயன்படுத்தப்படலாம்.

இதனைத் தடுக்கும் விதமாக, ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் க்யூஆர் கோடு மட்டும் அட்டையில் தெரியும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வடிவமைக்க திட்டமிட்டுள்ளது. க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து, சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை சரிபார்க்க முடியும். இந்த புதிய மாற்றம் எப்போது கொண்டு வரப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது பயன்பாட்டுக்கு வந்தால் மோசடிகள் தடுக்கப்படும் என்று தெரிகிறது.