கேசவ விநாயகத்தை பதவியில் இருந்து நீக்க பாஜக திட்டம்
தமிழ்நாடு பாஜகவின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தை பொறுப்பில் இருந்து விடுவித்து RSS பணிக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் RSS அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்தலைவர்கள் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல், பாஜக உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவின் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து கேசவ விநாயகத்தை மாற்ற சென்னையில் நடைபெற்ற BJP- RSS நிர்வாகிகள் கூட்டுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை தரப்பின் புகாரால் இந்த முட்வு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் வரை அப்பதவியை கூட்டு தலைமையின் கீழ் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணமானது பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணமானது தேர்தல் பணப்பட்டுவாடாவிற்காக எடுத்து செல்லப்பட்டதா? இதில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகமும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.