☰
×

அன்பில் மகேஷ் மனைவி ஜனனியை விசாரிக்க திட்டம்

 

திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மனைவி ஜனனியிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளது. 

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி என தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இன்று மதியம் 1 மணி முதல் நவம்பர் 4ம் தேதி வரை போலீஸ் கஸ்ட‌டி வழங்கபட்டுள்ளது. இதனால் மருத்துவ பரிசோதனைக்காக அன்பில் மகேஷை காவலர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 

இதனிடையே திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கில் அன்பில் மகேஷ் மனைவி ஜனனியை விசாரிக்க போலீசார்  திட்டமிட்டுள்ளனர். ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் ஏற்கனவே பெண் தொழில் அதிபர் சண்முகப்பிரியாவை போலீசார் விசாரித்த நிலையில் ஜனனியையும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.