☰
×

சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம்?

 

சென்னை சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது. 


சென்னை மற்றும் கொல்கத்தா சர்வதேச விமான நிலையங்களைப் பொது-தனியார் பங்களிப்பு மாதிரியின் கீழ் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை விமான நிலையத்தின் சேவைத் தரத்தை உயர்த்தவும், பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் தனியார் அமைப்பை நியமிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், விமான நிலைய ஆணையத்திற்குப் பதிலாக, சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பணியை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 

இந்நிலையில் சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் சேவைத் தரத்தை உலகளாவிய தரத்திற்கு உயர்த்தவும், அதன் உட்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பொது மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) முறையில் சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விமான நிலைய மேலாண்மை மேம்படுவதோடு, பயணிகளுக்கான வசதிகளும் அதிநவீன முறையில் உத்வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.