மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை முடிக்க திட்டம்
மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க தவெக திட்டமிட்டுள்ளது.
உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் அதிகமானோர் திமுக மற்றும் அதிமுகவினர்தான் இருக்கிறார்கள். ஆகையால் ஆளும் தரப்பினருக்கும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நல்ல தொடர்பு இல்லாததால் மாநகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் செயல்பாடுகள் சரியாக இல்லை என அதிகாரிகள் தமிழக வெற்றி கழக முக்கியமான நபரிடம் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். எந்த ஒரு வேலையும் செய்ய முடியவில்லை, மக்கள் பணியை சரியாக செய்ய முடியவில்லை என அதிகாரிகள் ஆளும் தரப்பு எம்எல்ஏக்களும் முதலமைச்சரின் நெருக்கமானவர்களிடமும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
மாநகராட்சியில் அதிக அளவில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளதால், அந்த தேர்தலை முதலில் வைத்துவிட்டு அதன் பின்பு ஊரக உள்ளாட்சித் தேர்தலை வைக்கலாம் என திட்டமிட்டுவருகின்றனர். ஏனென்றால் ஊரக உள்ளாட்சியில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் ஆளுங்கட்சியினர் நினைக்கின்றனர். ஆகவே மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று அந்த வெற்றியை வைத்துக்கொண்டு ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறலாம் என அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் இடைத்தேர்தல் முடிந்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கையை விரைவாக தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.