பி.கே.மூக்கையா தேவரின் நினைவு தினம் - ஈபிஎஸ் ட்வீட்
பி.கே.மூக்கையா தேவரின் நினைவு தினத்தையொட்டி ஈபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.
பா. கா. மூக்கையாத்தேவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, 1957, 1962, 1967, 1971 மற்றும் 1977 ஆகிய ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் சார்பாக உசிலம்பட்டி தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக ஐந்துமுறையும், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1963-இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார்.
இவரது முயற்சியால் உசிலம்பட்டி, மேநீலிதநல்லூர் மற்றும் கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கலைக் கல்லூரிகள் நிறுவப்பட்டது. இவரது நினைவைப் போற்றும் வகையில் மதுரை நகரத்தில் அரசரடி பகுதியில் 1990-ஆம் ஆண்டில், இவரது சிலை நிறுவப்பட்டது.