×

40 நிமிடங்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியிடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆலோசனை

 

கூட்டணி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த சென்னை வந்திருந்த பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் மரியாதை நிமித்தமாக ஆளுநர் ஆர் என் ரவியை சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் சந்தித்து பேசினார். 

எம் ஆர் சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இருந்து இபிஎஸ் உடனான சந்திப்புக்கு பிறகு புறப்பட்ட மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மாலை 4.50 மணியளவில் ஆளுநர் மாளிகை உள்ளே சென்றார், பியூஸ் கோயலுடன் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், எல் முருகன் ஆகியோர் இருந்தனர். சுமார் 40 நிமிடங்கள் சந்திப்புக்கு பிறகு 5.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டார். முன்பாக ITC ஹோட்டலில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதாக கூறப்பட்டது, அதற்காகவே தமிழிசை சௌந்தர்ராஜன், எச். ராஜா, அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் ITC ஹோட்டலுக்கு வந்தனர், ஆனால் மத்திய அமைச்சர்கள் ITC ஹோட்டல் செல்லாமல் நேராக ஆளுநர் மாளிகையில் இருந்து விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டனர்.