×

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அவலம்

 

சிவகாசியில் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அவலமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  

சிவகாசி அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.சி மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மனநலம் பாதிக்கபட்ட மாணவர்களை பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ வைரலானதை அடுத்து ஆசியர் இமானுவேலை போலீசார் கைது செய்தனர்.