×

பெட்ரோல் விலை ரூ.130 வரை உயரக்கூடும்- மத்திய அரசு எச்சரிக்கை

 

எத்தனால் கலக்கப்படவில்லை என்றால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 125 ரூபாய் முதல் 130 ரூபாயை எட்டக்கூடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எத்தனால் கலக்கப்படவில்லை என்றால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 125 ரூபாய் முதல் 130 ரூபாயை எட்டக்கூடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 135 டாலரை எட்டினால் விலை உயர்வை தவிர்க்க முடியாது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உயர்ந்தால் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்தால் லிட்டருக்கு ரூ.30 சேகரிக்க முடியும் என்றும், எத்தனால் கலப்பை அனுமதிமதிக்கவில்லை என்றால் விலை உயர்வை நுகர்வோர் தான் எதிர்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.  நாட்டில் விற்பனை செய்யப்படும் E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் பழைய வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனத்தின் என்ஜினுக்கும் பாதிப்போ அல்லது தேய்மானமோ ஏற்படுவதில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

வாகன உற்பத்தியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் நடத்திய விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே E20 பெட்ரோல் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும்,  20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 கோடிக்கும் அதிகமான கார்கள் E20 பெட்ரோலில் இயங்கி வருகின்றன. வாகனச் சேவை மையங்களின் ஆய்வில், எத்தனால் கலப்பால் என்ஜின் பழுது ஏற்பட்டதாக எந்தவொரு புகாரும் பதிவாகவில்லை எனவும்  மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.