×

#BREAKING பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு!

 

தனியார் எண்ணெய் நிறுவனமான Nayara, தனது பங்க்-களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பை செய்துள்ளது.

நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலையை ரூ.3 குறைத்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிவைத் தொடர்ந்து புதிய விலை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.  கடந்த மார்ச் மாதம் வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, விலையை அதிகரித்த நிலையில் தற்போது விநியோகம் சீராகியுள்ளதால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு, நாடு முழுவதும் உள்ள அனைத்து நயாரா எரிபொருள் நிலையங்களுக்கும் (சுமார் 7,000) பொருந்தும்.