ஆளுநர் மாளிகையின் வெளியே பெட்ரோல் குண்டு வீச்சு - அமைச்சர் ரகுபதி விளக்கம்
ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , ஆளுநர் மாளிகையின் வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டவர் உடனே கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது. சாலையில் நடந்து சென்ற அந்த நபர் அதை வீசியுள்ளார், இந்த சம்பவத்தில் எந்த உளவுத்துறை தோல்வியும் இல்லை. இதை வைத்து பாஜக அரசியல் செய்தாலும், அது தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. ஆளுநர் உடன் நாங்கள் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. அவர் மாநில பாஜக தலைவர் போல குற்றச்சாட்டுகளை கூறும் போது, அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என்றார்.