ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார் மனு
தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக ஆதவ் அர்ஜூனா மீது குற்ற வழக்கு பதிவு செய்ய கோரி வழக்கறிஞர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளத்தில் எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும் Genz தலைமுறையும் ஒன்று கூடி அதிகாரத்திற்கு எதிராக புரட்சியை உருவாக்கி காட்டினார்களோ அதே போல் இங்கும் எழும் என்றும், ஆளும் கட்சியின் அருவடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு புரட்சி தான் ஒரே வழி என தமிழ் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், அரசு மற்றும் காவல்துறையை அவதூறு பரப்பி பதிவிட்டுள்ளார்.
எனவே ஆதவ் அர்ஜூனா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் கனகவேல் பாண்டியன் என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.