×

பெரும்பிடுகு முத்திரையரின் புகழையும், பெருமையையும் போற்றிக் கொண்டாடுவோம் - அமமுக 

 

மாவீரர்  தஞ்சைக் கோன் பெரும்பிடுகு முத்திரையரின் புகழையும், பெருமையையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழுக்கும் தமிழறிஞர்களுக்கும் புகழ்சேர்த்த பேரரசர்,  எதிர்கொண்ட அனைத்து போர்களிலும் தோல்வியே கண்டிராத மாவீரர், ஆளுமைக்கும், வீரத்திற்கும் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று...  



வெற்றி பெற்றதற்கு பின்னர் சூட வேண்டிய வாகைப்பூவை, போருக்கு புறப்படும் போதே சூடிச்சென்று போர்க்களத்தில் எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்த தன்னிகரில்லா மாவீரர்  தஞ்சைக் கோன் பெரும்பிடுகு முத்திரையரின் புகழையும், பெருமையையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.