×

கோவில்களில் வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி அன்று வழிபட்ட சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி திருப்பூரைச் சேர்ந்த இன்று முன்னேற்ற கழக தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்திருந்த மனுவில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருவதாகவும்
 

விநாயகர் சதுர்த்தி அன்று வழிபட்ட சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி திருப்பூரைச் சேர்ந்த இன்று முன்னேற்ற கழக தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்திருந்த மனுவில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருவதாகவும் அதற்கான நிலையான செயல்பாட்டு விதிகளை வகுத்து தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு அனுப்பிய வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் தான் பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும், சிறிய கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் கோவில்களில் வைத்து வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழக அரசின் முடிவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை என்று கூறி வழக்கை முடித்துவைத்தார்.