அன்பிலுக்கு வீட்டு சாப்பாடு வழங்க அனுமதி
தனியார் பள்ளி ரூ.400 கோடி மோசடி வழக்கில் கைதான அன்பில் மகேஷுக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்க அனுமதி அளித்தது சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கட்சி நிதி என்ற பெயரில் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டார். காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவர், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே புழல் சிறையில் முறையான உணவு வழங்கப்படாததால் உடல் எடை குறைந்து விட்டது. புழல் சிறையில் உணவு சரியாக இல்லாததால் 2-4 கிலோ உடல் எடை குறைந்துவிட்டது. சிறையில் வீட்டு உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அன்பில் மகேஷ் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து தனியார் பள்ளி ரூ.400 கோடி மோசடி வழக்கில் கைதான அன்பில் மகேஷுக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்க அனுமதி அளித்தது சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்கப்பட்டதாக சிறை நிர்வாகம் தகவல்கள் வெளியாகியுள்ளது