☰
×

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி - உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல்

 

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அத்துமீறி யாரும் நுழைந்துவிடாமல் இருக்க காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதி முழுவதையும் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். 

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றிரவு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த சீராய்வு மனு இன்னும் விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை.