×

கடும் எதிர்ப்புகளுக்கு பின் ஈரோட்டில் பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி!

 

கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.


வேலூர் மாவட்டம், குடியாத்தம் துணை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “15.09.2026-ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் முதல் அண்ணா சிலை வரை ஊர்வலமாக செல்ல மனுதாரர் - S.சௌந்தர்ராசன், B.A, நகர மன்ற தலைவர், நெ.44/51, அழகு பொருமாள் கோயில் தெரு, பிச்சனூர், குடியாத்தம், வேலூர் மாவட்டம் என்பவர் அளித்த மனு மீது பரிசீலனை செய்து கீழ் கண்ட நிபந்தனைகளுடன் 15.09.2026 ம் தேதி காலை 10.00 மணிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

1. ஊர்வலம் செல்லும் போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடது புறமாக செல்ல வேண்டும்.

2. ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் சாலையின் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்தி, சாலையின் இடதுபுறமாக சீரான முறையில் செல்ல வேண்டும். மேலும் தாங்கள் ஊர்வலம் செல்லும்போது வழியில் நிறுத்தவோ அல்லது வழக்கமான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது.

3. காவல்துறை தரப்பில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்வதை உறுதி செய்வது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முழு பொறுப்பாகும்.

4. ஊர்வலம் செல்லும் போது வரும் ஆம்புலன்ஸ் மற்றும் அவரச உதவி வாகனங்களுக்கு உடனடியாக வழி விட வேண்டும்.

மேற்படி விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடபட்டுள்ளது.