×

நவம்பர் முதல் சென்னை மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி?

மெரினா கடற்கரையை மக்கள் பார்வைக்கு நவ.1 முதல் திறக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரானா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி நுழைந்த பொதுமக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திவந்தனர். இருப்பினும் மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல மனுவில், மெரினா
 

மெரினா கடற்கரையை மக்கள் பார்வைக்கு நவ.1 முதல் திறக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரானா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி நுழைந்த பொதுமக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திவந்தனர்.

இருப்பினும் மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல மனுவில், மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் முதல் மக்கள் அனுமதிக்கப்படுவார்களா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு நவம்பர் 1ம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை சுத்தப்படுத்தி அழகானதாக மாற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்யவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.