×

அடி மேல் அடி... நெல்லையில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு

 

நெல்லையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பத்திருந்த நிலையில் போதிய இட வசதி இல்லாததால் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்களும் 234 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவரான விஜய் தமிழகம் முழுவதுமே பல்வேறு ஊர்களுக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சமயங்களில் போக்குவரத்து விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் பொதுமக்கள் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் போதிய இடவசதி, தண்ணீர், உணவு மற்றும் அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரும் பட்சத்தில் அனுமதிகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் நெல்லையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஏப்.8ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். அதற்காக கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலரான மோனிகா ராணா மற்றும் காவல் துறையினரிடம் விண்ணப்பித்துள்ளனர்.காவல்துறையினர் தமிழக வெற்றி கழகத்தினர் பிரச்சாரத்திற்காக குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்துவிட்டு போதிய இடவசதி இல்லாததால் ராஜகோபாலபுரம் பகுதியில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் 2வதாக நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்து மீண்டும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளனர். அங்கு காவல் துறையினர் போதிய வசதிகள் அந்த இடத்தில் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.