ஐ.பெரியசாமி சொத்து, டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டிலிருந்து சொத்து, டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்எல்ஏ, மகள் இந்திராணி ஆகிய 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (16.8.2025) அன்று சோதனை நடத்தினர். 10 மணி நேரத்தைக் கடந்தும் அமலாக்கச் சோதனையை நடத்தியது. 2006-2011 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி அவர்கள் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சொல்லி, அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 2012 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்த நிலையில்தான், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா? என அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் சென்னை, உள்ளிட்ட இடங்களில் திண்டுக்கல் இரு நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகனும் பழனி எம்.எல்.ஏவுமான செந்தில் குமார் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத சொத்துக்கள், முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.