×

"சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்று அறிவுறுத்துக" - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்! 

 

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் ஆளுநரின் தலைமையில் நாளை  சிறப்பாக நடைபெற உள்ளது. அச்சமயம், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்துவருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்துவருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்று பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.