☰
×

தஞ்சாவூரில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட பெரியார் சிலை அகற்றம்

 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் பிரம்மகரா கண்டீஸ்வரர் ஆலய வாயில் முன்பு இருந்த பெரியார் சிலை, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி அகற்றப்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் அமைந்துள்ளது பிரம்மக்கண்டீஸ்வரர் கோயிலிக்கு சொந்தமான இடத்தில் 7 அடி உயரம் கொண்ட பெரியார் சிலை இருந்தது. கோயில் இடத்தில் உரிய அனுமதி பெறாமல் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளதாக இராம.ரவிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் பேரில் நான்கு வாரங்களுக்குள் பெரியார் சிலையை பாதுகாப்பாக அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடைசி நாளான நேற்று இரவோடு இரவாக பெரியார் சிலை அகற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மாவட்ட நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து பெரியார் சிலை அகற்றப்பட்டது குறிப்பிடதக்கது.