×

கமலா ஹாரிஸ் வெற்றிபெற சொந்த ஊரில் மக்கள் வழிபாடு: வீடியோ உள்ளே!

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற மக்கள் அவரது சொந்த ஊரில் வழிபாடு செய்து வருகின்றனர். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் அதிபர் டிரம்ப் களமிறங்கியுள்ளார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகக் களம் இறங்குகிறார் ஜோ பிடன். அதேசமயம் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளி பெண். கமலா ஹாரீஷின் தாய் சாமளா
 

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற மக்கள் அவரது சொந்த ஊரில் வழிபாடு செய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் அதிபர் டிரம்ப் களமிறங்கியுள்ளார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகக் களம் இறங்குகிறார் ஜோ பிடன். அதேசமயம் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளி பெண். கமலா ஹாரீஷின் தாய் சாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். இவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர் அத்துடன் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணைஅதிபர் போட்டியில் இறங்கியிருப்பது மன்னார்குடி அருகேயுள்ள பைங்கநாடு துளசேந்திரபுரம் கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கமலா ஹாரிஸின் தாய் வழி தாத்தா அந்த ஊரில்தான் பிறந்து வளர்ந்தார்.

இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரில் வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தில் குலதெய்வ கோவிலான அய்யனார் கோவிலில் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

கமலா ஹாரிஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பாக கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். கமலா ஹாரீஸ் வெற்றி பெறும் பட்சத்தில் நாட்டின் துணை அதிபராகும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுவார். மேலும் முதல் இந்திய அமெரிக்க ஆப்பிரிக்க பெண்ணாகவும் அவர் இருப்பார். இதன் காரணமாக தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் கமலா ஹாரீஸூக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.