×

‘திருச்சியில் அதிகரிக்கும் கூட்டம்’ பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிக்கும் மக்கள்!

திருச்சி அரசு பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் படிக்கெட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்கின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்ததால் நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டும், பொதுப்போக்குவரத்து ஏதும் இயக்கப்படாததால் அதனை நம்பியிருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் பலர் வேலைக்கு செல்ல முடியாமல், வேலை இழக்கும் சூழலும் நிலவியது. இதன் காரணமாக மீண்டும் பொதுப்போக்குவரத்து சேவையை தொடக்க வேண்டும் என பல தரப்பினர்
 

திருச்சி அரசு பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் படிக்கெட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்கின்றனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்ததால் நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டும், பொதுப்போக்குவரத்து ஏதும் இயக்கப்படாததால் அதனை நம்பியிருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் பலர் வேலைக்கு செல்ல முடியாமல், வேலை இழக்கும் சூழலும் நிலவியது. இதன் காரணமாக மீண்டும் பொதுப்போக்குவரத்து சேவையை தொடக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதே போல மருத்துவ நிபுணர் குழுவும் போக்குவரத்தை தொடங்க பரிந்துரைத்தது.

அதன் படி 5 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பேருந்து சேவை மீண்டும் தொடக்கப்பட்டது. நேற்று மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சத்தால் பலர் பேருந்துகளில் பயணிக்கவில்லை. இந்த நிலையில் இன்று பல மாவட்டங்களில் பேருந்துகளில் அதிக அளவு மக்கள் பயணித்து வருகிறார்களாம். திருச்சியில் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்ததால், படிக்கட்டுகளில் தொங்கிய படி கூட மக்கள் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.