நினைத்ததை விட தவெகவுக்கு மக்கள் அமோக ஆதரவு- முடங்கிய இணையதளம்!
2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் இணையதளத்தை தவெக அறிமுகம் செய்த சில மணி நேரங்களிலேயே அந்த இணையதளம் முடங்கியது.
சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இணையதளத்தை அறிமுகம் தவெக செய்தது. ’வெற்றி தமிழ்நாடு’ இயக்கம் என்ற அந்த இணையதளத்தில் மக்கள் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என அக்கட்சி தலைமை கேட்டுக்கொண்டது. "நம் தேவைகளை நாமே திட்டமிடும் இந்த வெற்றி தமிழ்நாடு இயக்கத்தில் இணைவோம்.." என பொதுமக்களுக்கு தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அந்த இணையத்தளமானது ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுவதால், ஸ்தம்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என “tvkmanifesto2026@gmail.com” என்ற மின்னஞ்சல் முகவரியை தவெக தலைமை அறிமுகம் செய்துள்ளது.