×

தேர்தல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்- சிங்கப்பெருமாள் கோவில் அருகே போக்குவரத்து நெரிசல்

 

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் நாளை திங்கட்கிழமை அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீண்டும் தொடங்க உள்ளதால் சென்னை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர் இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில்  காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை  காலை முதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பாக, திருச்சி  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் சென்னை நோக்கித் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளன.  சிங்கப்பெருமாள் கோவில் முதல் திருத்தேரி வரை வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலையில் சீர் செய்யும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் தொடர்ச்சியாக வாகனங்கள் அதிகரித்து வருவதால் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் கடுமையான போக்குவரத்து  நெரிசலானது ஏற்பட்டுள்ளது.