"இந்த பேனர் இங்க இருக்கக்கூடாது"- திருமாவுக்கு எதிராக மக்கள் சாலைமறியல்
பண்ருட்டி அருகே விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள கொக்குபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கொக்குப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் விசிக நிர்வாகிகள் சார்பில் பிறந்தநாள் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு சமூகத்தினர் இடையே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்ற வேண்டும் என கொக்குப்பாளையம் கிராம மக்கள் பண்ருட்டி - மடப்பட்டு சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது சில இளைஞர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த விசிக பேனர் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பொழுது அவர்களை போலீசார் பிடிக்க என்றபோது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.