×

பெரம்பூர் மக்கள் நேரடியாக முதல்வர் விஜய்க்கு புகார் அளிக்கலாம்

 

பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.

தனது சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய். அலுவலகத்தின் உள்ளே பொது இ- சேவை மையத்தையும் திறந்து வைத்தார். பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். பின்னர் பெரம்பூரில் உள்ள ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு ரேஷன் பொருள் வழங்கினார். பெரம்பூர் மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக CM விஜய்க்கு அனுப்பும் வகையில் பிரத்யேக செயலி துவங்கப்பட்டுள்ளது. முதல்வரே நேரடியாக புகார்களை பார்க்கும் வகையில் Dashboard உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக MLA அலுவலகத்தில் மொத்தம் 5 பேர் இரண்டு ஷிஃப்ட் முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.