கோவை மக்களே உஷார்..! இன்று இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை.
வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
எங்கெல்லாம் மின் தடை?
மத்தம்பாளையம்
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணர்பாளையம் ரோடு.
மதுக்கரை
அறிவொளி நகர், சேராபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி
மில் கோவில்பாளையம்
செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்
தேவனாம்பாளையம்
வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம்
பொதுமக்கள் கவனத்திற்கு:
மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் மோட்டர் போட்டு தண்ணீர் நிரப்பி வைத்து மற்றும் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.