×

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் : இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் பொது முடக்க அறிவிப்பால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்த காலகட்டத்தில் டாஸ்மாக் இயங்காது என்றும் மளிகை கடை, இறைச்சி கடை மதியம்
 

தமிழகத்தில் பொது முடக்க அறிவிப்பால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்த காலகட்டத்தில் டாஸ்மாக் இயங்காது என்றும் மளிகை கடை, இறைச்சி கடை மதியம் 12மணிவரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 24ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து வருகின்றனர்.பெரும்பாலானோர் பெண்கள் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் பயணிக்க தொடங்கியிருந்தால், இன்று முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

பயணிகள் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இன்று இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருக்கும் முக்கிய நகரங்களுக்கும் இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கம் சிறப்பு பொதுமக்கள் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து முன்பதிவுக்கு www.tnstc.in இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம். . கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்