வாக்களிப்பதற்காக படையெடுத்த மக்கள்..! 2 மணி நேரத்தில் 1 கோடி பேர் ஓட்டு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்திலேயே சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பார்க்கும்போது, காலை 9 மணி நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 19.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பல மாவட்டங்களில் காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் 33,133 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் மற்றும் 83,000-க்கும் அதிகமான காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை 9 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்திலேயே சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 19.55% வாக்குகள் பதிவாகியுள்ளது. அங்கு 343708 வாக்குகள்பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு -38546, ஈரோடு மேற்கு - 49240, மொடக்குறிச்சி -41948, பெருந்துறை -42384, பவானி -44874, அந்தியூர் - 38907,கோபிசெட்டிபாளையம் -44194, பவானிசாகர் - 43615 வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக நீலகிரி, இராமநாதபுரம் மாவட்டங்களில் 15.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.