×

"இந்த தண்ணிய உங்க வீட்ல குடிப்பீங்களா?"- எம்.எல்.ஏ பல்லவியை பதறவைத்த மக்கள்

 

சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் கடந்த 10 நாட்களாகக் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.’

சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு சாஸ்திரி நகர்  பகுதியில், கடந்த 10 நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் குடிநீரைப் பயன்படுத்த முடியாமல், தவித்துவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்தப் புகாரின் அடிப்படையில், திரு.வி.க. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்ய வந்த பல்லவி மற்றும் அதிகாரிகளை மக்கல் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லவியை சூழ்ந்துகொண்ட மக்கள், நீண்ட நாட்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாட்டிலில் கழிவுநீரைக் காட்டி "இந்த தண்ணிய உங்க வீட்ல குடிப்பீங்களா? குழந்தைகள் ஒருவாரமாக பள்ளிக்கு செல்லவில்லை என்றும், முகம் கழுவ முடியல, பல்லு விலக்க முடியல" என பொதுமக்கள்  அதிகாரிகளிடம் கொந்தளித்தனர். அதுமட்டுமின்ரி, அடிக்கடி அப்பகுதியில் மின்தடை ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி உத்தரவிட்டார். மேலும் மின்தடையைப் போக்க மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி விரைந்து தீர்வு காண்வதாகவும் உறுதி அளித்தார்.