×

கார்களில் படையெடுக்கும் மக்கள்- விழுப்புரம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

 

தீபாவளியையொட்டி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு கார்களில் அதிக பேர் பயணிப்பதாலும், விழுப்புரம் அருகேயுள்ள இருவேல்பட்டு பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதாலும் இருவேல் பட்டு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகேயுள்ள இருவேல்பட்டு பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் அதிக அளவில் கார்களில் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக  2 கிலோ மீட்டர் தூரத்திற்கு  வாகனங்கள் அனிவகுத்து ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன. போக்குவரத்து நெரிசல் மற்றும் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.  திருவெண்ணெய் நல்லூர் காவல்துறையினரும் போக்குவரத்து போலீசாரும்  போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். தீபாவளி பண்டிகைக்கு  அதிக அளவு வாகனங்கள் சாலையில் பயணிக்கும் என்று தெரிந்தும் அதிகாரிகள் சர்வீஸ் சாலையை  சரி செய்யாததால் கூடுதலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.