×

மக்களே உஷார்... ஸ்கிரப் டைபஸ் பாதிப்பு- அலட்சியம் வேண்டாம்

 

தமிழகத்தில் டெங்கு, ப்ளூ, கொரோனாவுடன் 'ஸ்கிரப் டைபஸ்' எனப்படும் உண்ணி காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

ரிக்கட்ஸியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்டவை கடிப்பதன் மூலம் ஸ்கிரப் டைபஸ் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் உள்ளிட்ட அறிகுறிகளுடன், பூச்சி கடித்த இடத்தில் சிறிய சிவப்பு தடிப்பும் ஏற்படலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாமல் அலட்சியப்படுத்தினால், பூச்சி கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு உள்ளுறுப்புகள் செயலிழப்பு, கோமா, உயிரிழப்பு உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.

வீட்டைச் சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். புதர்கள் மற்றும் வனப்பகுதிகளுக்குச் செல்லும்போது பூச்சிகள், ஒட்டுண்ணிகள் உடலில் படாதவாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.