மக்களே உஷார்..! இந்த மாவட்டங்களில் அக்டோபர் 10 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை..!
“தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) இன்று (அக்.07) மிதமான மழை பெய்யக்கூடும்.
இதேபோல், நாளை (அக்.08), கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழையும், தேனி திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இதேபோல், அக்டோபர் 9-ஆம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அக்டோபர் 10-ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழையும், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.