மக்களே உஷார்..! கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சல்..?
Apr 18, 2024, 12:32 IST
கேரளாவில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் டெங்கு, அம்மை உள்ளிட்ட நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன.
தற்போது ஆலப்புழா எடத்துவா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் வளர்க்கப்பட்ட வாத்துக்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. இதனால் இறந்த வாத்துக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் வாத்துக்களுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.