மக்கள் ஷாக்... தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது..!!
உலக சந்தையிலும், உள்ளூர் சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை வரலாற்று உச்சத்தை தொட்டது. ஆனால் அதை விட வேகமாக இப்போது சரிகிறது.
இவை அனைத்திற்குமே சர்வதேச சூழல்கள் தான் காரணமாக இருக்கின்றன.
சர்வதேச சந்தையில் ஸ்பாட் கோல்டின் விலை ஒரு அவுன்ஸ் 367 டாலர்கள் அதாவது 7.5 சதவீதம் குறைந்து 4525 டாலர்களாக இருக்கிறது. ஜனவரி 29ஆம் தேதி அன்று உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5300 டாலர்களுக்கும் மேல் எட்டியது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,900 ரூபாய்க்கும், சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்பனையாகின.வெள்ளி கிராம், 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 950 ரூபாய் குறைந்து, 13,950 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 7,600 ரூபாய் சரிவடைந்து, 1,11,600 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு 20,000 ரூபாய் சரிவடைந்து, 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.14,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.280க்கு விற்பனை.