மக்கள் செம ஷாக்..! இனி வீட்டின் முன் கார் நிறுத்த ஆண்டிற்கு ₹25,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும்..!
கிரேட்டர் பெங்களூரு ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை: பெங்களூரு நகர சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் நோக்கில், விதி 13ன் கீழ், குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் தவிர, மற்ற வாகனங்களை சாலைகளில் இனி இலவசமாக நிறுத்த முடியாது. இதற்காக நகர சாலை கள், 'ஏ, பி, சி' என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். 'ஏ' பிரிவு சாலைகளில் கார்கள் நிறுத்த ஒரு மணி நேரத்துக்கு 80 ரூபாய்; 'பி' பிரிவு சாலைகளில் 60 ரூபாய்; 'சி' பிரிவில் 40 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் வாகனங்களை நிறுத்தி னால், கட்டணம் அதிகரிக்கலாம். அதிகபட்சமாக ஒன்றரை மடங்கு வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பொது சாலைக்கு பதி லாக, வாகனம் நிறுத்தும் வளா கங் களில், மாதம்தோறும், இரு சக்கர வாகனங்களுக்கு 1,000 முதல், 2,000 ரூபாய்; கார்களுக்கு 2,000 முதல் 4,000 ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்படும். தினமும் இரவு 8:00 முதல் மறுநாள் காலை 8:00 மணி வரை வாகனங்கள் நிறுத்தினால், மாதத்துக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். நகரில் உள்ள காலியான நிலங்களை, பொது மக்கள் அல்லது உரிமையாளர்கள் தாமாக முன்வந்து, பொது வாகன நிறுத்தங்களாக மாற்றினால், அவர்களுக்கு 35 ஆண்டுகள் வரை, அந்த இடத்துக்கு சொத்து வரியில் விலக்கு அளிக்கப்படும். சொந்தமாக கார் வைத்திருப்போர், தாங்கள் குடியிருக்கும் வீட்டின் முன் சிறிய கார்களை நிறுத்த ஆண்டுதோறும், 15,000 ரூபாயும்; 'செடான்' கார்களுக்கு 20,000 ரூபாயும்; எஸ்.யு.வி., கார்களுக்கு 25,000 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதுவும் இந்த கார்கள் நிறுத்தப்படும் போது, மற்ற வாகனங்கள் செல்ல இடவசதி இருக்கிறதா என்பதை ஜி.பி.ஏ., மார்ஷல்கள் பார்வையிட்டு, அறிக்கை தந்தால் மட்டுமே அனுமதி தரப்படும். இந்த வரைவு திட்டம் குறித்து, 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். அவை பரிசீலிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.