மக்கள் ஷாக்..! ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை..!
தங்கம் விலை இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து பெரும்பாலும் ஏற்றம் மட்டுமே கண்டுவருகிறது. ஒரே நாளில் ஆயிரங்களில் ஏறுவதால் சாமானியர்கள் அத்தியாவசிய காரணங்களுக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக டிரம்ப் கிரீன்லாந்தை குறிவைத்து காயை நகர்த்தி வருவதால், தங்கம் விலை தினந்தோறும் புதிய உச்சம் கண்டு வருகிறது. எனவே சொற்ப அளவில் தங்கம் வாங்க நினைப்போருக்கு இது உகந்த நேரம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். ஏனென்றால், கிரீன்லாந்தை கைப்பற்றும் எண்ணத்திலிருந்து டிரம்ப் பின்வாங்கும் பட்சத்தில் தங்கம் விலை சட்டென 10% குறையும் என்கின்றனர்.
நேற்று (ஜன 23) காலை ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 450 உயர்ந்து ரூ. 14,650க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் ரூ. 100 குறைந்து ரூ.14,550க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,620க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை காலை ரூ. 3,600 உயர்ந்து மாலை ரூ. 800 குறைந்த நிலையில் ஒரு சவரன் ரூ. 1,16,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மீண்டும் ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,16,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை, 22K தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960க்கும் விற்பனையான நிலையில், தற்போது கிராமுக்கு மேலும் ரூ.130 உயர்ந்து ரூ.14,750க்கும், சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,18,000க்கு விற்பனையாகிறது.
இந்த விலை உயர்வு நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.