மக்கள் ஷாக்..! தங்கம் வெள்ளி விலை மீண்டும் கிடுகிடுவென உயர்வு..!!
தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி நேற்று முன்தினம் விற்பனை ஆனது. தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதற்கு பிறகு இந்தியா மீது தொடுத்த வர்த்தக போரின் காரணமாக அந்நாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இது மட்டும் இன்றி அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை கணிசமாக குறைத்துவிட்டு, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை திசை திருப்ப தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயருமா என எதிர்பார்த்த நிலையில் அதிரடியாக சரிந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,320 குறைந்து ரூ.98,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை இன்று மீண்டும் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ₹150 உயர்ந்து ₹12,500-க்கும், சவரனுக்கு ₹1200 உயர்ந்து ₹1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் போலவே கடந்த சில நாட்களாக வெள்ளியின் விலையும் உயர்ந்து வந்தது.
இந்நிலையில், இன்று (டிச. 17) வெள்ளியின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 12 உயர்ந்து, ரூ.223க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.2.23 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு நடுத்தர குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.